ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தமிழில் கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் மூலம்தான் ரசிகர்களிடையே பிரபலமானார். இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் 'அயலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
தமிழில் கமலின் 'இந்தியன் 2' படம் மட்டும் கைவசம் வைத்துள்ளார். தமிழை தவிர தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் போதை கடத்தல் கும்பல் தொடர்பான வழக்கில் சிக்கி விசாரணை வளையத்துக்குள் இருக்கிறார். உடலை பிட்டாக வைத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட ரகுல், யோகா செய்யும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
ரகுல், தனது ஸ்டைலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.