புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம் | குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு | யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படக்குழு மீது வழக்குப்பதிவு | ‛அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை | கங்குவா டிரைலர் - அஜித் கொடுத்த ரியாக்ஷன் | 'கங்குவா' வெளியீடு - வழக்கு சிக்கல்களுக்குத் தீர்வு | 'பிளடி பெக்கர்' நஷ்டத்தைத் திருப்பித் தரும் தயாரிப்பாளர் நெல்சன்? | மே 1 - தொழிலாளர் தினத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' ரிலீஸ்? | தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன்' பட ரிலீஸ் | பொங்கல் ரேசில் இணையும் பாலாவின் வணங்கான் |
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் கமிட்டாகி நடித்து வந்தார் வடிவேலு. ஆனால் படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற பிறகு கதையில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று வடிவேலு சொன்னதை அடுத்து அவருக்கும் டைரக்டர் சிம்புதேவனுக்கு மிடையே மோதல் வெடித்தது. இதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்றது. அதன்பிறகு இரு தரப்பிலும் நடந்த விசாரணைக்கு பிறகு வடிவேலுவுக்கு மறைமுக ரெட் கார்டு போட்டு வைத்திருந்தார்கள். இதனால் வடிவேலுவை புதிய படங்களுக்கு யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் டைரக்டர் ஷங்கர் வடிவேலுவுக்கு இடையே சமரசம் ஏற்பட்ட நிலையில் ரெக்கார்டு நீக்கப்பட்டது. இதையடுத்து சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அதோடு சில நாய்களுடன் வடிவேலு போஸ் கொடுக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய தினம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாள் வடிவேலு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி இருக்கிறார் சுராஜ். இந்நிலையில் படத்தின் மோஷன் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். அவை வைரலாகின.