சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

ஹிந்தியில் சல்மான்கானை வைத்து பிரபுதேவா இயக்கிய ராதே படம் தோல்வி அடைந்ததை அடுத்து படம் இயக்குவதை தள்ளிவைத்துவிட்டு மீண்டும் முழு நேர நடிகராக உருவெடுத்திருக்கிறார் பிரபுதேவா. இந்த நிலையில் அவர் நடித்துள்ள தேள் படம் விரைவில் திரைக்கு வரும் நிலையில், பகீரா, பொய்க்கால் குதிரை, பிளாஷ்பேக் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் பிரபுதேவா.
இந்த நிலையில் மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்கத்தில் தற்போது மைடியர் பூதம் என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபுதேவா. அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கும் இந்தப் படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார். குழந்தைகளை டார்கெட் ஆக கொண்டு இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு பிரபுதேவா பூதம் கெட்டப்பில் தோன்றும் மோஷன் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.