ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
கீதா கோவிந்தம் என்கிற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானது விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி. அதன்பிறகு டியர் காம்ரேட் படத்திலும் இவர்கள் இணைந்து நடித்தனர். ஆனால் கன்னடத்தில் தனது அறிமுகப்படத்தில் ராஷ்மிகா நடிக்கும்போது அந்தப்படத்தின் அந்தப்படத்தின் ஹீரோ ரக்சித் ஷெட்டிக்கும், இவருக்கும் காதல் மலர்ந்து நிச்சயதார்த்தம் வரை சென்றது.. ஆனால் அதன்பிறகு தெலுங்கில் ராஷ்மிகாவின் படங்கள் ஹிட்டாகி, முன்னணி நடிகையாக மாறியதும், நிச்சயதார்த்தத்தை ரத்துசெய்து, காதலரையும் பிரிந்துவிட்டார் ராஷ்மிகா.
மேலும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவரும் இணைந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தது, விழாக்களில் ஒன்றாக கலந்துகொண்டது ஆகியவற்றின் மூலம் இவர்கள் இருவருக்குள்ளும் நட்பையும் தாண்டி காதல் மலர்ந்துள்ளதாக கடந்த இரண்டு வருடமாகவே சொல்லப்பட்டு வருகிறது. தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
சில நாட்களுக்கு முன் விஜய் தேவரகொண்டா, தான் நடித்துவரும் லைகர் படத்தின் படப்பிடிப்பிற்காக பாரிஸ் சென்றார். அதேசமயம் தனது படங்களுக்கு சற்றே ஒய்வு கொடுத்த ரஷ்மிகா, அதே பாரிஸுக்கு டூர் கிளம்பி சென்றார். தற்போது லைகர் படப்பிடிப்பை முடித்து விஜய் தேவரகொண்டா ஊர் திரும்பியுள்ளார்.
இதை தொடர்ந்து ராஷ்மிகாவும் தனது ட்ரிப்பை முடித்து தற்போது ஐதராபாத் திரும்பியுள்ளார். இருவரும் பாரிஸில் சந்தித்துக்கொண்டதாக புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ராஷ்மிகாவின் இந்த தனிப்பட்ட பயணம் அவர்களது காதலை உறுதி செய்வது போலத்தான் இருக்கிறது என டோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்..