'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். அந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம், அதைத்தொடர்ந்து கமலின் தூங்காவனம், பின்னர் த்ரிஷ்யம்-2 ஆகிய படங்களிலும் நடித்தார். இப்போதும் சீரான இடைவெளியில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஆஷா சரத்தின் மகள் உத்தராவும் 'கெத்தா என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
அம்மாவைப் போலவே இவரும் நடனத்தில் வல்லவர். பொறியியல் படிப்பை முடித்துள்ளார். இன்னொரு பக்கம் மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வரும் உத்தரா சமீபத்தில் நடைபெற்ற அழகிபோட்டி ஒன்றில் கலந்துகொண்டு ரன்னர் ஆக வெற்றி வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தகவலை பூரிப்புடன் பகிர்ந்து கொண்டுள்ள ஆஷா சரத், “வெற்றி பெறுகிறோமோ, தோல்வி அடைகிறோமோ என்பதல்ல விஷயம். போட்டிகளில் தைரியமாக, தன்னம்பிக்கையுடன் கலந்து கொள்வது தான் முக்கியம். அந்த வகையில் என் மகளை பார்த்து பெருமைப்படுகிறேன் என கூறியுள்ளார் ஆஷா சரத்.