தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
தென்னிந்தியத் திரையுலகத்தில் மற்ற மொழிகளை விட தெலுங்குத் திரையுலகம் அதிகமானத் திரைப்படங்களைத் தயாரிப்பதிலும், அதிகமான தியேட்டர்களில் படங்களை வெளியிடுவதிலும் முன்னணியில் உள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டு ஆந்திரா, தெலங்கானா என இரு மாநிலங்களாக தெலுங்குத் திரையுலகம் பிரிந்தது. இரண்டும் வெவ்வேறு மாநில அரசுகள் என்பதால் இரண்டையும் சமாளிக்க வேண்டிய சூழல் தெலுங்கு திரையுலகத்திற்கு ஏற்பட்டது.
சமீபத்தில் ஆந்திர மாநில அரசு சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்தது. மேலும், அதிகாலை காட்சி உள்ளிட்ட சிறப்புக் காட்சிகளின் அனுமதியையும் ரத்து செய்தது. திரையுலகத்திலிருந்து சிலர் கோரிக்கை வைத்தாலும் அதை மாநில அரசு இன்னும் ஏற்கவில்லை.
தெலுங்கில் அடுத்தடுத்து “புஷ்பா, ஆர்ஆர்ஆர், பீம்லா நாயக், ஆச்சார்யா, ராதே ஷ்யாம்” என பெரிய படங்கள் வர உள்ளன. ஆந்திர அரசைப் போல மற்றொரு தெலுங்கு மாநிலமான தெலங்கானா அரசும் டிக்கெட் கட்டணம், சிறப்புக் காட்சிகளில் மாற்றம் கொண்டு வந்தால் திரையுலகை அது பாதிக்கும்.
எனவே, தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த தனய்யா, தில் ராஜு, ராஜமவுலி, த்ரிவிக்ரம் உள்ளிட்ட சிலர் தெலங்கானா மாநில சினிமாட்டோகிராபி அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாச யாதவ்வை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் ஆந்திர மாநில அரசு போல தெலங்கானாவில் மாற்றங்களைக் கொண்டு வரும் எண்ணமில்லை எனத் தெரிவித்துள்ளாராம். அதனால், தெலுங்கு திரையுலகினர் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.