திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் |

தெலுங்குத் திரையுலகத்தின் அதிரடி மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா. அவருடைய படங்களில் உள்ள நம்ப முடியாத ஆக்ஷன் காட்சிகளுக்காகவே அவருக்கு மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் அதிகம் உண்டு. ஒரு ஜாலிக்காகவாவது அவருடைய படங்களை ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள்.
பாலகிருஷ்ணா நடித்த 'அகான்டா' என்ற படம் கடந்த வாரம் வெளியானது. தெலுங்கு மாநிலங்களில் மட்டுமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் தெலுங்கு ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடி வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 55 கோடிக்கு வியாபாரமாகியுள்ள இந்தப் படம் கடந்த மூன்று நாட்களில் மட்டும் அந்த வசூலை எடுத்துவிட்டதாம். சில ஏரியாக்களில் படம் மூன்றாவது நாளிலேயே லாபக் கணக்கை ஆரம்பித்துவிட்டது என்றும் சொல்கிறார்கள். முதல் நாளிலேயே 20 கோடி ரூபாய் வசூலித்து இதுவரை வெளிவந்த பாலகிருஷ்ணா படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துவிட்டதாம். தற்போது படத்தின் ஹிந்தி வெளியீட்டு உரிமை 20 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு தெலுங்கில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படமாக 'அகான்டா' படம் அமைந்துள்ளது. தெலுங்கில் அடுத்தடுத்து சில முன்னணி நடிகர்களின் பெரிய படங்கள் வெளிவர உள்ளன. 'அகான்டா'வின் வரவேற்பும் வெற்றியும் அந்தப் படங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளன.