''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
'ஏ கோலி சோடாவே என் கறிக்குழம்பே உன் குட்டி பப்பி நான்' என ஆட்டத்தில் அதகளம் செய்த சாய் பல்லவி வெர்ஷன் டூ போலவே இருக்கும் தங்கை பூஜா கண்ணன் 'சித்திரை செவ்வானம்' படத்தின் மூலம் அறிமுகமாவது குறித்து மனம் திறக்கிறார்...
நீங்க எப்படி சினிமாவுக்கு வந்தீங்க
அக்கா சாய் பல்லவி உடன் நான் ஷூட்டிங் போன போது டப்பிங் பேசியிருக்கேன். அவங்க கூடவே இருந்ததால் எனக்கும் நடிப்பு ஆசை வந்துருச்சு. மெடிக்கல் அண்ட் சைக்யாட்ரிக் சோசியல் ஒர்க் படிச்சிருக்கேன். இப்போ டிப்ளமோ இன் சயின்ஸ் கவுன்சிலிங் படிக்கிறேன்.
முதல் படம் அனுபவம் எப்படி இருந்தது.
திரில்லா, பயமா இருந்தது... அக்கா சாய் பல்லவி இந்த துறையில் இருப்பதால் இரண்டு பேரையும் கொஞ்சம் ஒப்பிடுவாங்க.. என்னால் முடிந்த வரை பெஸ்ட் கொடுத்து இருக்கேன்னு நினைக்கிறேன்
சமுத்திரக்கனி அப்பாவாக 'சித்திரை செவ்வானம்'
இவ்ளோ படம் நடித்து இருக்காரே ரீடேக் போனா என்ன ஆகுமோனு முதலில் பயந்தேன். ஆனால், முதல் நாளே 'எப்படிமா இருக்கே'னு அன்பா கேட்டார். எல்லா காட்சிகளும் இயல்பாக எடுத்தாங்க. சினிமா மாதிரியே எனக்கு தெரியலை, சில காட்சிகளில் நிஜ அப்பா, பொண்ணு போல கத்துவோம்.
வசனங்கள் எல்லாம் எப்படி மனப்பாடம் தானா
இயக்குனர் சில்வா, சமுத்திரக்கனி எல்லாம் உதவி பண்ணினாங்க. கேமரா முன்னாடி எங்க நிக்கணும், எந்த பக்கம் பாக்கணும்னு இரண்டு பேருமே நிறைய சொல்லி கொடுத்தாங்க. சொந்த குரலில் தான் பேசியிருக்கேன்.
தமிழில் அக்கா நடித்ததில் பிடித்தது
பாவக் கதைகள்... அதே மாதிரி துல்கர் - சாய்பல்லவி ஜோடியும் பிடிக்கும். அக்கா தவிர ஐஸ்வர்யா ராஜேஷ்,கீர்த்தி சுரேஷ் பிடிக்கும்.
வீட்டில் இரண்டு நடிகைகள் இருப்பதால்
வீட்டை பொறுத்தவரை எந்த போட்டியும் இல்லை. அம்மாவை விட அக்கா கிட்ட தான் அதிகம் இருப்பேன். அக்காவுக்கு நான் ஒரு குழந்தை போல். அதனால் எங்களிடம் எந்த போட்டியும் வராது.
உங்க அக்கா எதுவும் டிப்ஸ் கொடுத்தாங்களா
படப்பிடிப்பில் எப்படி பிறர் கூட பேசுறாங்க, பழகுறாங்க, வேலைன்னு வந்தா எப்படி இருப்பாங்க ஒரு காட்சி எடுக்கும் போது எப்படி தயாராவார்கள்னு கவனிச்சிருக்கேன், இந்த படத்திற்கு என்னுடன் படப்பிடிப்புக்கு வரலை. டப்பிங் பேசி போட்டு காட்டினேன் நல்லா இருக்குனு சொன்னாங்க..
அடுத்த திட்டம்
சத்யமா எதுவும் என் மைண்ட்ல இல்லை, இந்த படம் வெளிவந்து மக்கள் என்ன சொல்றாங்க என்று கேட்க வெயிட் பண்றேன். ‛யுனிசெப்'ல சேர்ந்து குழந்தைகளுக்கு சொல்லி தர ஆசை இருக்கு.