மாஸ்டர் 2ம் பாகத்தை விரும்பும் லோகேஷ் | ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி | நம் வீரம் மிகுந்த ராணுவத்தை வணங்குகிறேன் : கமல் | ரஜினி நினைக்கும் விஷயம் | விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? |
சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர்கள் இப்போது ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த வருடத்தில் மட்டும் சீரியல் நடிகர்களில், ரேஷ்மா - மதன், சித்து - ஸ்ரேயா, ஷபானா - ஆரியன் ஆகியோர் தங்கள் காதல் கதைகளை சொல்லி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். அந்த வரிசையில் தற்போது புதுஜோடி ஒன்று இணைந்துள்ளது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் அம்மன் சீரியலில் நாயகன், நாயகியாக அமல்ஜித் மற்றும் பவித்ரா நடித்து வருகின்றனர். இந்த ஜோடி, தாங்கள் ஒருவரையொருவர் காதலித்து வருவதாக தற்போது அறிவித்துள்ளனர். இதனையடுத்து சீனியர்களை போலவே உங்களுக்கும் சீக்கிரம் கல்யாணம் நடக்கட்டும் என, ரசிகர்கள் இப்போதே கல்யாண வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.