சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
ரேணுகா சுவாமி என்ற ரசிகரை படுகொலை செய்த வழக்கில், முன்னனி கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது காதலி நடிகை பவித்ரா கவுடாவை தொடர்ந்து சமூக வலைதளம் மூலம் டார்ச்சர் செய்து வந்ததால் இந்த கொலை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கும், விசாரணையும் நடந்து வருகிறது. இந்த வழக்கு குறித்து பேட்டி அளித்த போலீஸ் கமிஷனர், பவித்ரா கவுடாவை தர்ஷனின் மனைவி என்று குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி பெங்களூரு மாநகர காவல்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளர். அதில், ''செய்தியாளர் சந்திப்பில் நடிகை பவித்ரா கவுடாவை, தர்ஷனின் மனைவி என குறிப்பிட்டீர்கள். அது தவறானது. தர்ஷனின் சட்டப்பூர்வமான மனைவி நான் மட்டுமே என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நீங்கள் தவறாக குறிப்பிட்டதை தொடர்ந்து, கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வராவும், ஊடகங்களும் பவித்ரா கவுடாவை மனைவி என்றே கூறி வருகின்றனர். பவித்ரா கவுடாவுக்கு சஞ்சய் சிங் என்பவருடன் ஏற்கனவே திருமணமாகி, ஒரு மகள் இருக்கிறார்.
இந்த உண்மை போலீஸாரின் ஆவணங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். பவித்ரா கவுடாவும், தர்ஷனும் கணவன் மனைவி அல்ல. அவர் எனது கணவரின் தோழி மட்டுமே. அதுவும் தொழில் சார்ந்த நட்பு மட்டுமே அவர்களுக்குள் இருந்தது'' என எழுதியுள்ளார்.