முதல் முறையாக இரண்டு வேடங்களில் அல்லு அர்ஜுன் | குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் |
கன்னட திரையுலகில் குறிப்பிடத்தக்க பிரபல நடிகராக வலம் வந்தவர் தர்ஷன். இவர் கடந்த ஜூன் 8ம் தேதி தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் தன் காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி டார்ச்சர் செய்தார் என்கிற காரணத்திற்காக அவரை தனது பண்ணை வீட்டில் வைத்து கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு, கடந்த ஜூன் 11ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மட்டுமல்லாது நடிகை பவித்ரா கவுடா மற்றும் இந்த கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக கூறி மொத்தம் 16 பேர்கள் கைது செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட ஆறு மாசம் சிறைவாசம் கடந்துவிட்ட நிலையில் தர்ஷன் மற்றும் பவித்ரா கவுடா ஆகியோரின் முன் ஜாமீன் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தர்ஷன் முதுகு வலியால் அவதிப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தன் பேரில் ஆறு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் மட்டும் வழங்கப்பட்டது. அதுவும் தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தர்ஷனின் வக்கீல், மரணம் அடைந்த ரேணுகா சுவாமி ஒன்றும் சமூகத்தில் உத்தமரான நபர் அல்ல.. இது போல பல பெண்களுக்கு ஆபாசமான புகைப்படங்கள் வீடியோக்களை அனுப்பி தொந்தரவு கொடுக்கும் ஒரு சமூகத்திற்கு கேடான ஆசாமிதான் என்பது குறித்து வாதங்களை அழுத்தமாக எடுத்து வைத்னர்.
மேலும் இந்த வழக்கில் நடிகர் தர்ஷன் தவறாக சேர்க்கப்பட்டுள்ளார் என்று புதிய கோணத்திலும் தங்கள் வாதங்களை முன் வைத்தார்கள். இதனை தொடர்ந்து தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருக்குமே முன் ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.