விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு |
தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர் சிவசங்கர். 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். திருடா திருடி படத்தில் இவர் நடனம் அமைத்த மன்மதராசா பாடல் இன்றளவும் பேசப்படுகிறது. கடைசியாக பாகுபலி படத்திற்கு நடனம் அமைத்திருந்தார். இதுதவிர வரலாறு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, பரதேசி, தில்லு முல்லு, அரண்மனை, சர்கார், உள்பட ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்.
72 வயதான சிவசங்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிவசங்கர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.
அவரது இளைய மகன் அஜய் கிருஷ்ணா அருகில் இருந்து கவனித்து வருகிறார். மருத்துவ செலவுக்கு பணம் இல்லை. பணம் தந்து உதவுங்கள் என்று அவர் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.