சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சினிமாவில் தற்போது இருக்கும் சில மூத்த நடிகர்கள் 60 வயதைக் கடந்தவர்கள். ஆனால், அவர்கள் தங்கள் மகள் வயதுடைய நடிகைகளுடன்தான் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்புவார்கள். இது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.
இந்திய மொழிகளில் உள்ள பல மொழி சினிமாக்கள் தற்போது யதார்த்த பாதையில் நடைபோட ஆரம்பித்துவிட்டது. ஆனாலும், சில ஹீரோக்கள் தொடர்ந்து இளம் வயது நடிகைகளுடன்தான் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறார்கள்.
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் 107வது படத்தில் ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடிக்கிறார். பாலகிருஷ்ணா 60 வயதைக் கடந்தவர், ஸ்ருதிஹாசன் 30 வயதைக் கடந்தவர். இருவரும் ஜோடி என்றதும் தெலுங்கு சினிமா உலகம் மட்டுமல்ல, தமிழ் சினிமாவும் அதிர்ச்சியடைந்தது.
இப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் 2 கோடி சம்பளம் கேட்டதும் தயாரிப்பு நிறுவனம் தர. சம்மதித்ததாம். அதனால்தான் ஸ்ருதியும் நடிக்கிறார் என்கிறார்கள். இப்படத்தின் இயக்குனர் கோபிசந்த் மல்லினேனி, ஸ்ருதியிடம் கெஞ்சி கேட்டதும் ஒரு காரணம் என்கிறார்கள்.
அதே சமயம் படத்தில் நடிக்க சில கண்டிஷன்களை ஸ்ருதிஹாசன் போட்டிருக்கிறாராம். படத்தில் தேவையில்லாத காதல் காட்சிகள் இருக்கக் கூடாது, அதிலும் நெருங்கிய காதல் காட்சிகள் இருக்கக் கூடாது. கட்டிப் பிடித்து நடிக்கும் காட்சி கூடாது, கட்டில் காட்சிகள் இருக்கக் கூடாது. தன்னுடைய கதாபாத்திரத்தை கண்ணியமாகக் காட்ட வேண்டும் என பல கண்டிஷன்கள் போட்டுள்ளாராம்.
படப்பிடிப்பு முடிவதற்குள் இயக்குனருக்குத்தான் நெருக்கடி அதிகம் இருக்கும் போலிருக்கிறது.