ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
தென்னிந்தியத் திரையுலகத்தில் குறிப்பாக தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பான்-இந்தியா படங்கள் என அடுத்தடுத்து சில படங்கள் வெளியாக உள்ளன. ஆனால், அவர்களுடன் ஒப்பிடும் போது பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் பான்-இந்தியா ஸ்டார், இன்னும் கூடுதலாகச் சொல்ல வேண்டுமென்றால் பான்-வேர்ல்டு ஸ்டார் ஆக இருந்தார்.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் தென்னிந்தியப் படங்களுக்கு தனது படங்களின் மூலம் முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் ரஜினிகாந்த். அவருடைய படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, வட இந்தியா என பல இடங்களில் வசூலைக் கொட்டியது. அவரது வழியைப் பின்பற்றித்தான் பல தென்னிந்திய நடிகர்கள் முன்னேறத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதே சமயம், ரஜினிகாந்த்தின் சமீபத்திய படங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் குறிப்பிடத்தக்க அளவுக்கு வசூல செய்யும் நிலை உருவாகியுள்ளது. மற்ற மாநிலங்களில் வசூலில் தள்ளாடுகின்றன. பொதுவாக ஆந்திரா, தெலங்கானாவில் ரஜினிகாந்த் படங்கள் 50 கோடி வரை வசூலித்துள்ளன. சமீபத்தில் வெளியான 'அண்ணாத்த' படம் 10 கோடி வசூலையே தடுமாறித்தான் பெற வேண்டியதாகி உள்ளது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாத்த படத்தை சிலர் மட்டுமே 200 கோடி வசூல் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் தீபாவளிக்கும் அடுத்த சில நாட்களுக்கும் மட்டுமே படத்தின் வசூல் சிறப்பாக இருந்தது. அதன்பின் மழை காரணமாக மிகவும் மோசமாகிவிட்டது என்பதுதான் உண்மை நிலை என்கிறார்கள்.
அடுத்து சிறப்பான படம் ஒன்றைக் கொடுத்துவிட்டு நடிப்பிலிருந்து ரஜினிகாந்த் ஓய்வு பெறுவார் என தெலுங்குத் திரையுலகத்தில் பேசிக் கொள்கிறார்களாம்.