எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் | விதி எப்போதும் மாறாது: ஜெயம் ரவி | ஒரு நேர்மையாளனின் கதை - மனம் திறந்த நந்தா பெரியசாமி | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “ஒருதலை ராகம்” | 2024 - முத்திரை பதித்த முத்துக்கள்... | தாயைக் காத்த தனயன், உரியடி, பைரவா - ஞாயிறு திரைப்படங்கள் | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா |
நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்ததை அடுத்து மீண்டும் சினிமாவில் ஜெட் வேகத்தில் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார் சமந்தா. அதன் காரணமாக தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் கால்பதிக்க தயாராகிவிட்டார். அதோடு தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் ஐந்து மொழிகளில் இரண்டு பாகங்களாக தயாராகி வரும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் சம்மதம் தெரிவிக்கிறார் சமந்தா.
ரூ 250 கோடி பட்ஜெட்டில் செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வைக்க சில பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த படக்குழு இப்போது சமந்தாவிடம் அது குறித்து பேசி இருப்பதோடு அந்த பாடல் நடனம் ஆட அவருக்கு ஒன்றரை கோடி சம்பளம் பேசியதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.
ஆரம்பத்தில் சிங்கிள் பாடலுக்கு நடனமாட தயங்கிய சமந்தா, இயக்குனர் சுகுமார் தனக்கு நெருக்கமான நண்பர் என்பதால் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒரு பாடலுக்கு நடனம் ஆட சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.