2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் |
மலையாளத்தில் வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்பாதர் படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்கும் சத்யதேவ் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் கடந்த ஒரு வார காலமாக சத்ய தேவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டதாக பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன.
கதைப்படி நயன்தாராவின் கணவராகவும் படத்தின் முக்கிய வில்லனாகவும் சத்யதேவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் சத்யதேவ் போன்ற வளர்ந்து வரும் நடிகருக்கு பதிலாக தனது கணவர் கதாபாத்திரத்துக்கு ஒரு முன்னணி நடிகரை ஒப்பந்த செய்யுமாறு நயன்தாரா கூறி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது அந்த செய்தியை காட்பாதர் படக்குழு மறுத்துள்ளது.
இந்தப் படத்தில் சத்ய தேவ்விற்கு ஜோடியாக நடிப்பது குறித்து நயன்தாரா எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. திட்டமிட்டபடி ஜனவரி மாதம் முதல் சத்யதேவ்வுடன் இணைந்து நயன்தாரா நடிக்கப் போகிறார். மேலும், தற்போது நயன்தாரா, சத்யதேவ் ஆகிய இருவரும் பல படங்களில் பிசியாக நடித்து வருவதால் அவர்கள் தேதி கிடைக்காததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த வருட ஜனவரி மாதம் முதல் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த காட்பாதர் படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.