2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் |
தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நடிகராக இருந்து வருபவர் பிரபுதேவா. கடந்த சில வருடங்களாக இயக்கத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டு ஹிந்தியில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்தார். அவ்வப்போது தமிழ் சினிமாவில் நாயகனகாக நடிக்க இந்தப் பக்கம் வந்துவிட்டுப்போவார்.
அவர் நாயகனாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் 'தேவி 2'. அதற்கடுத்து அவர் நடித்து வந்த 'பொன் மாணிக்கவேல், தேள், யங் மங் சங்' ஆகிய படங்கள் அப்படியே முடங்கி இருந்தன. அந்தப் படங்கள் முடிந்து சில வருடங்களான பிறகும் அவை எப்போது வெளிவரும் என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் அவர் நாயகனாக நடித்த 'பொன் மாணிக்கவேல்' படம் நாளை மறுநாள் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அவர் நாயகனாக நடித்துள்ள மற்றொரு படமான 'தேள்' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நேற்று நடைபெற்றது. விரைவில் இந்தப் படமும் வெளியாக உள்ளது. இந்தப் படங்களை அடுத்து 'யங் மங் சங்' படமும் வெளிவரும் எனத் தெரிகிறது.
பிரபுதேவா தற்போது 'பாகீரா' படத்திலும், சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி வரும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.