டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் தனது கணவர் நடிகர் நாக சைதன்யாவை விட்டுப் பிரிந்தார். பிரிவுக்குப் பின் மீண்டும் சினிமாவில் பிஸியாக களமிறங்க அவர் முடிவு செய்துள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பான்-இந்தியா படமாக உருவாகி வரும் 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார் சமந்தார். ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடுவது இதுவே முதல் முறை. இப்பாடலில் கிளாமராக நடனமாடவும் சமந்தா சம்மதித்துள்ளாராம். எனவே, இந்தப் பாடலை பிரம்மாண்டமாக படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
இப்படி ஒரு 'ஐட்டம் சாங்' இதுவரை தெலுங்குத் திரையுலகத்தில் வந்தது இல்லை என்று சொல்லுமளவிற்கு பாடல் இருக்க வேண்டும் என படத்தின் இயக்குனர் சுகுமார் சொல்லி இருப்பதாகவும் தகவல்.
தற்போது தெலுங்கில் 'சாகுந்தலம்' படத்திலும், தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்திலும் நடித்து முடித்துள்ளார் சமந்தா. இரண்டு மொழிகளிலும் மேலும் பல புதிய படங்களில் நடிக்க கதைகளைக் கேட்டு வருகிறாராம்.




