அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் பாலிவுட் படம் ஒன்றில் மூலம் சினிமாவிற்கு வந்தார். அதன்பிறகு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள இவர், சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் ஆண்டு கொரோனா நேரத்தில் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். காஜல் அகர்வால் தமிழில் பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். வெளியீட்டுக்காக இந்தப் படம் காத்துக்கொண்டிருக்கிறது.
கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். இந்த படம் திடீர் விபத்து, கொரோனா, ஷங்கர் லைகா மோதல் உள்ளிட்ட சில பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டது. பிரச்சினைகள் அனைத்தும் பேசி முடிக்கப்பட்டது. அடுத்த மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்நிலையில் காஜல் கர்ப்பமாக இருப்பதால் இதில் கலந்துகொள்ள முடியாது என்றும், படத்திலிருந்து விலகிவிட்டதாகவும், அவருக்கு பதில் வேறு ஒரு நடிகை நடிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.