'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஒளிப்பதிவாளராக இருந்த சிவா, சிறுத்தை படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார். அடுத்து அஜித்தை வைத்து தொடர்ந்து 4 படங்கள் இயக்கினார். விஸ்வாசம் வெற்றியை தொடர்ந்து ரஜினியுடன் இணைந்தார். இந்த கூட்டணியில் தீபாவளி அன்று வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிவாவிடம் கேட்கப்பட்து.
அதில், அண்ணாத்த குறித்த நெகடிவ் விமர்சனங்கள் என்னை பாதிக்காது என்று கூறியுள்ளார். விஜய் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், நல்லதே நடக்கும் என்றும் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தில் சிவா உதவி கேமராமேனாக பணிபுரிந்துள்ளார். அப்போது இருந்தே இருவருக்கும் உள்ளே நட்பு தொடர்ந்து வருகிறது என்ற சிறுத்தை சிவா, வேதாளம் படத்தை பார்த்துவிட்டு என்னை நேரில் அழைத்து விஜய் பாராட்டினார் என்றும் தெரிவித்தார்.