Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நீதிபதியின் கருத்து புண்படுத்தி விட்டதாம்: நடிகர் விஜய் வருத்தம்

25 அக், 2021 - 14:46 IST
எழுத்தின் அளவு:
Judge-comments-hurt-me-says-Actor-Vijay-at-court

சென்னை : கொகுசு கார் இறக்குமதிக்கான வரிவிலக்கு தொடர்பான வழக்கில் தனி நீதிபதியின் கருத்து தன் மனதை புண்படுத்தி விட்டதாக நடிகர் விஜய் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார். வாகன பதிவுக்காக, மண்டல போக்குவரத்து அதிகாரியை அணுகினார். நுழைவு வரி தொடர்பாக, ஆட்சேபனையில்லா சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கும்படி, போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார். இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்தும் பட்சத்தில், சான்றிதழ் வழங்குவதாக உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நுழைவுவரியில் இருந்து விலக்கு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் விஜய் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‛‛நடிகர்கள் வரி விலக்கு கோருவை ஏற்க முடியாது. சாதாரண மக்கள் வரி கட்டும் நடிகர்கள் வரி விலக்கு கேட்பது ஏன். நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு என கடுமையாக விமர்சித்து இருந்தார். அதோடு விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் மேல் முறையீடு செய்தார். அதில் தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்ட விமர்சனங்களையும், அபராதத்தையும் நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, ‛‛சூர்யா, தனுஷ் உள்ளிட்டோரும் இதுபோன்று வழக்கு தாக்கல் செய்துள்ளனர். சட்டவிரோதமாக இந்த வழக்கை தொடரவில்லை, வரிவிலக்கு கோருவது சட்டப்பூர்வமான நடவடிக்கை என்பதாலேயே வழக்கு தொடர்ந்தோம். வரி ஏய்ப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை. நிலுவை வரித்தொகையான ரூ.32.30 லட்சம் ஆக.,7ல் செலுத்தப்பட்டு விட்டது. வழக்கு விவரங்களில் தொழிலை பற்றி குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை. இந்த வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் என்னை புண்படுத்தி உள்ளன. கஷ்டப்பட்டு உழைத்து கார் வாங்கிய நிலையில் நீதியின் விமர்சனம் தேவையற்றது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிய நிவேதா தாமஸ்கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிய நிவேதா ... தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு கவர்னர், முதல்வர் வாழ்த்து தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Ramesh -  ( Posted via: Dinamalar Android App )
25 அக், 2021 - 20:14 Report Abuse
Ramesh பால்டாயில் இனிக்கும்
Rate this:
அன்பு - தஞ்சை,கனடா
25 அக், 2021 - 20:05 Report Abuse
அன்பு ஆறுமாதம் ஜெயிலில் தள்ளி, களி தின்னவிட்டால், புண்பட்ட மனதிற்கு இதமாக இருக்கும்.
Rate this:
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
25 அக், 2021 - 17:45 Report Abuse
Parthasarathy Badrinarayanan நீதிபதியின் கருத்தை வரவேற்கிறோம். எங்களால் சொல்ல முடியாததை நீதிபதி சொல்லியுள்ளார். தவறில்லை. கோடிக்கணக்கில் வருமானம் வரும் தொழிலில் இருந்துகொணடு வரிகட்ட மறுப்பவரது படத்தை ஒதுக்க வேண்டும்.
Rate this:
25 அக், 2021 - 15:24 Report Abuse
சாம் இவன் பின்னாடி சுத்துற முட்டாள்களே.. உங்களை சொல்லணும்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in