800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் | பாபி சிம்ஹாவை புறக்கணித்த தமிழ் ஹீரோக்கள் | எனக்கு ஜாதி பிடிக்காது : மேனனை உதறித் தள்ளிய சம்யுக்தா | 92வது வருடத்தில் தெலுங்கு சினிமா | 3வது முறை கிராமி விருது வென்று அசத்திய இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் | போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் | ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி | கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா |
விஷால், ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள ஆக்சன் படம் எனிமி. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி உள்ளார். மிர்னாளினி ரவி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், தம்பி ராமையா , கருணாகரன் ,மாளவிகா அவினாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
மினி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பால்ய பருவத்தில் உயிருக்கு உயிரான நண்பர்களாக இருக்கும் இருவர் வளர்ந்த பிறகு எதிர் எதிர் துருவங்களாக அதாவது ஒருவர் போலீஸ் அதிகாரியாகவும், ஒருவர் சர்வதேச கிரிமினலாவும் நின்று மோதிக் கொள்கிற கதை.
இந்த படம் தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ரஜினி நடித்த அண்ணாத்த படத்துக்கு பெரும்பாலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு இந்த படத்திற்கு தியேட்டர்கள் மறுக்கப்படுவதாகவும் எப்படி இருந்தாலும் படத்தை தீபாவளிக்கு வெளியிட்டே தீருவேன் என்றும் தயாரிப்பாளர் வினோத்குமார் கூறியிருந்தார். இந்த நிலையில் டிரைலர் வெளியிட்டு படத்தின் வெளியீட்டை மீண்டும் உறுதி செய்துள்ளனர். 200க்கும் சற்று அதிகமான தியேட்டர்களில் எனிமி வெளியாகும் என்று தெரிகிறது.