ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சினிமா படப்பிடிப்பின் போது நடிகை லட்சுமிராயிடம் ரசிகர்கள் அத்துமீறியதில் அவரது மேலாடை கிழிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. செல்வகுமார் இயக்கத்தில், "உன்னாலே உன்னாலே" வினய் நடித்து வரும் புதியபடம் "ஒன்பதுல குரு". இப்படத்தில் வினய் ஜோடியாக லட்சுமிராய் நடித்து வருகிறார். இப்படத்தின் பாடல்காட்சி ஒன்றுக்காக புதுச்சேரி சென்று இருந்தனர் இப்படக்குழுவினர். புதுச்சேரியில் பால் பண்ணை அருகே வினய், லட்சுமிராய் ஆகியோருடன் 50 நடன கலைஞர்கள் பங்கேற்று நடனம் ஆடிய பாடல் காட்சி படமாக்கப்பட்டது. படப்பிடிப்பை காண ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர். படப்பிடிப்பு இடைவேளையின் போது லட்சுமிராயிடம் ரசிகர்கள் சிலர் ஆட்டோகிராப் கேட்டனர். அப்போது அவர்களுக்கு ஆட்டோகிராப் போட வந்தார் லட்சுமிராய்.
லட்சுமிராயிடம் ஆட்டோகிராப் வாங்க ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு வந்ததில் ரசிர்கள் சிலர் அவர் மீது விழுந்துவிட்டனர். அதில் சிலர் அவரிடம் சில்மிஷத்திலும் ஈடுபட்டுள்ளனர். ரசிகர்களிடமிருந்து மீண்டு வரமுடியாமல் சிரமப்பட்டார் லட்சுமிராய். இதில் அவரது மேலாடை கிழிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து படப்பிடிப்பு குழுவினர் விரைந்து வந்து லட்சுமிராயை, ரசிகர்களிடம் இருந்து பத்திரமாக மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ரசிர்களின் அத்துமீறலால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.