'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவை சமீபத்தில் பிரிந்தார். இந்த பிரிவுக்கான காரணம் குறித்து பலவாறான தகவல்கள் வெளியானது. குறிப்பாக சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினார், அதனை அவரது கணவர் குடும்பம் தடுத்தது என்றும், சமந்தாவுக்கும் ஒரு காஸ்ட்யூம் டிசைனருக்கும் இருந்த நெருக்கம்தான் காரணம் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் இதனை மறுத்த சமந்தா தனது தனிப்பட்ட விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனாலும் பல தெலுங்கு யு டியூப் சேனல்ககளில் சமந்தா பிரிவுக்கான காரணங்கள் விவாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் தன்னைப் பற்றி அவதூறாகத் தகவல்கள் பரப்பிய சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர் சமந்தாவின் திருமண வாழ்க்கை குறித்தும், அவருக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் பேசியதால், அவர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.