‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

யு டியூப் தளத்தில் வெளியாகும் படங்களின் டீசர், டிரைலர்கள் பெறும் அதிகபட்ச பார்வைகள் அந்தப் படங்களுக்கு வியாபாரக் கதவைப் பெரிய அளவில் திறந்துவிடுகிறது. அதிக பார்வைகளைப் பெறும் படங்களுக்கு வியாபாரம் செய்வது எளிதாக இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் என்றாலும், ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் என்றாலும் அதிகப் பார்வைகளைப் பெற்று தங்கள் படம் சாதனை படைக்க வேண்டும் என்றுதான் அப்படங்களின் ஹீரோக்கள் நினைக்கிறார்கள்.
சூர்யா நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் 'சூரரைப் போற்று' டீசர் தான் 15 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருந்து வந்தது. இப்போது அந்த சாதனையை 'ஜெய் பீம்' முறியடித்துள்ளது. இந்த டீசர் வெளியாகி ஆறு நாட்களில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'அண்ணாத்த' டீசரை விடவும் அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது கூடுதல் தகவல்.
நாளை இப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. அதுவும் சூர்யா பட டிரைலர்களில் முதலிடத்தைப் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.