நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
யு டியூப் வருவதற்கு முன்பு ஒரு படத்தின் பாடல்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது என்பதை அந்தப் படங்களின் கேசட், சிடி-க்கள் ஆகியவற்றின் விற்பனையை வைத்துத்தான் கணக்கிடுவார்கள்.
யூ டியூப் வந்த பிறகு அதில் ஒரு பாடலுக்குக் கிடைக்கும் பார்வைகளைப் பொறுத்தே அப்பாடலின் வரவேற்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. கூடுதலாக, 'எப்-எம்' ரேடியோக்களில் அப்பாடல் எத்தனை முறை ஒலிபரப்பப்படுகிறது என்பதையும் வைத்து கணக்கில் கொள்ளலாம்.
ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஒன்றிற்கு முதல் முறையாக இமான் இசையமைத்துள்ள 'அண்ணாத்த' படத்தின் இசை வெளியீடு முழுமையாக நடக்காமல் வாரத்திற்கு ஒன்றாக நடந்து வருகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு படத்தின் முதல் சிங்கிளாக எஸ்பி பாலசுப்ரமணியம், ரஜினிகாந்திற்காகக் கடைசியாகப் பாடிய 'அண்ணாத்த...அண்ணாத்த...' என்ற பாடல் யு டியுபில் வெளியிடப்பட்டது. இரண்டு வாரங்களுக்குள்ளாக இப்பாடலுக்கு 91 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது.
அதற்கடுத்து பத்து நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் டூயட் பாடலான 'சாரல்..சாரல் காற்றே...' என்ற பாடல் வெளியானது. மெலடி பாடலான இப்பாடலை 60 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு 'மருதாணி...' என்ற பாடல் வெளியானது. ரஜினிகாந்த் தங்கையான கீர்த்தி சுரேஷுக்கு ஏதோ ஒரு விசேஷம் நடக்கும் போது இடம் பெறும் பாடல் எனத் தெரிகிறது. குஷ்பு, மீனாவும் இப்பாட்டில் இருக்கிறார்கள். மூன்று நாட்களில் இப்பாடல் 33 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
விஜய், அஜித் படங்களின் பாடல்கள் என்றால் இந்நேரம் 1 கோடி பார்வைகளைக் கடந்து போயிருக்க வாய்ப்புண்டு. இருந்தாலும் அவர்களது காலத்தில் ரஜினி படப் பாடல்களும் இந்த அளவிற்கு பார்வைகளைப் பெறுவது ஆச்சரியம்தான்.
'அண்ணாத்த' நவம்பர் 4ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.