அன்பானவரை இழந்து வாடுகிறேன் ; தவறான தகவலை பரப்பாதீங்க - மீனா | அவதார் 2 : கேட் வின்ஸ்லெட் லுக் அவுட் | வின்னர் 2 உருவாகிறது | 20 ஆண்டுகள் ; மாறாத மாதவன் - சிம்ரன் நெகிழ்ச்சி | அதே படம்... அப்பா இசையமைத்த மற்றொரு ஹிட் பாடலை பயன்படுத்திய யுவன் | கமலையும், மம்முட்டியும் இணைக்கும் விஸ்வரூபம் எடிட்டர் | திலீப்பின் பறக்கும் பப்பன் படத்துக்கு இசையமைக்கும் அனிருத் ? | எம்ஜிஆர் பட கதை... ரஜினியின் டைட்டில் ; அசத்தும் நயன்தாரா பட இயக்குனர் | நான் வில்லன் இல்லை ; கடுவா ரகசியம் உடைத்த விவேக் ஓபராய் | குஷ்பு தொடரில் புதிய ஹீரோ |
சினிமாவில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஸ்டைலில் நடித்து தங்களுக்கு என ஒரு பாதையை உருவாக்கி, அதில் வெற்றி கண்டனர். அந்தவகையில் தமிழ் சினிமாவில் கிராமத்து ஸ்டைலில் நடித்து வெற்றி பெற்ற நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். கரகாட்டக்காரன் தொடங்கி அவரது பல படங்கள் வசூலில் சாதனை புரிந்தது வரலாறு. அரசியலிலும் ஒரு ரவுண்ட் வந்த இவர் எம்.பி.யாகவும் இருந்துள்ளார். தற்போது சினிமாவை விட்டு சற்று ஒதுங்கியிருந்தாலும் சினிமா தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அவ்வப்போது இவரைப்பற்றியும், இவரது உடல்நிலை பற்றியும் சில வதந்திகள் பரவும். அப்படி இப்போதும் சில வதந்திகள் சமூகவலைதளங்களில் பரவின. இதுகுறித்து அவர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை : ‛‛ராமராஜனை பற்றி தற்சமயம் தவறான வதந்தியை பரப்பி வருகிறார்கள். யாரும் அதை நம்ப வேண்டாம். அவர் பூரண நலத்துடன் இருக்கிறார். இரண்டு படங்களுக்கு தனது கதையை தந்துள்ள ராமராஜன் அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். ராமராஜன் உடல் நலத்துடனும், மனவலிமையுடனும் இருக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் பட துவக்க விழாவில் கலந்து கொள்வார்'' என்றார்.