ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
2019ல் சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், யோகிபாபு, தம்பி ராமைய்யா நடிப்பில் வெளியான படம் விஸ்வாசம். டி.இமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் தாமரை எழுதி, சித்ஸ்ரீராம் பாடிய ‛கண்ணான கண்ணே...' பாடல் சூப்பர் ஹிட்டானது. இப்போது வரை யூ-டியூப்பில் அதிகப்படியான ரசிகர்களால் கேட்டு ரசிக்கப்பட்டு வரும் இந்த பாடலின் லிரிக் வீடியோ இப்போது 15 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. அதோடு 9.83 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதன் வீடியோ பாடல் 14.5 கோடி பார்வைகளை கடந்துள்ளது. விரைவில் இந்த வீடியோவும் 15 கோடி பார்வைகளை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.