கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
யு டியுப் வீடியோ தளத்தில் தமிழ் சினிமா டிரைலர்களில் முதலிரண்டு இடங்களை விஜய்யின் 'பிகில், பீஸ்ட்' ஆகிய படங்கள்தான் தக்க வைத்துக் கொண்டுள்ளன. 'பீஸ்ட்' டிரைலருக்கு 60 மில்லியன் பார்வைகளும், 'பிகில்' டிரைலருக்கு 57 மில்லியன் பார்வைகளும் கிடைத்துள்ளன. 'காஞ்சனா 3' டிரைலர் 43 மில்லியன் பார்வைகளுடன் 3வது இடத்திலும், 'விஸ்வாசம்' டிரைலர் 34 மில்லியன் பார்வைகளுடன் 4வது இடத்திலும் இதுவரையில் இருந்தது.
தற்போது அஜித்தின் 'துணிவு' டிரைலர் 'விஸ்வாசம்' டிரைலர் பார்வைகளை முந்தி 38 மில்லியன் பார்வைகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 'பீஸ்ட்' டிரைலரை முறியடிக்க இன்னும் 22 மில்லியன் பார்வைகள் தேவைப்படுகிறது. அதை முறியடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவர உள்ள 'வாரிசு' டிரைலர் விரைவில் வெளியாக உள்ளது. அதனால், 'பீஸ்ட்' சாதனையை 'வாரிசு' டிரைலரே முறியடிக்கலாம்.
டிரைலரைப் பார்வையிடுபவர்களில் பாதி பேர் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்த்தால் கூட அந்தப் படங்களுக்கு 400 கோடி வசூல் கிடைத்துவிடும். ஆனால், டிரைலரைப் பார்க்கும் அனைவரும் தியேட்டர்களுக்கு வருவதில்லை என்பதே உண்மை.