மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

நடிகர் சரத்குமார் கடைசியாக நடித்த 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்திருந்தார் . இந்த படத்திற்கு பிறகு விஜய்யின் 'வாரிசு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர தி ஸ்மைல் மேன், ஆழி உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதில் மாதவ் தாசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஆழி'. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இதில் மிரட்டலான தோற்றத்தில் சரத்குமார் நடித்துள்ளார். ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, ஜெஸ்சி என்பவர் இசையமைத்து வருகிறார். 888 புரொக்ஷ்ன்ஸ் நிறுவனம் சார்பில் பொன்னு கண்ணன் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிரட்டலான லுக்கில் சரத்குமார் உள்ளார்.