இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தெலுங்கில் கொரட்டல்ல சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள படம் ஆச்சார்யா. அவருடன் ராம்சரண், காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வருகிற கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட முடிவு செய்திருந்தார் சிரஞ்சீவி.
ஆனால் ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் படம் ஜனவரி 7-ந்தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டதால் இப்போது தனது ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்துள்ளார் சிரஞ்சீவி. அதாவது கிறிஸ்துமஸ்க்கு வெளியிட்டால் இரண்டே வாரத்தில் ஆர்ஆர்ஆர் படம் வெளியாகும்போது தியேட்டர் பிரச்சினை ஏற்படும் அல்லது தனது படத்தின் வசூல் பாதிக்கும் என்பதால் ஒரு வாரம் முன்னதாக டிசம்பர் 17-ந்தேதியே வெளியிடுகிறார். அப்படி டிசம்பர் 17-ந்தேதி சிரஞ்சீவியின் ஆச்சார்யா படம் வெளியாகும் அதே நாளில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படத்தின் முதல் பாகமும் வெளியாகிறது.