'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
திரிஷ்யம் என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த ஜீத்து ஜோசப்-மோகன்லால் கூட்டணி, அடுத்ததாக ராம் என்கிற படத்திற்காக இணைந்தனர். வெளிநாட்டில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், கொரோனா முதல் அலை காரணமாக அந்தப்படம் இடையில் நிறுத்தப்பட்டதது. அதன்பிறகு தான் த்ரிஷ்யம்-2 படத்தை துவங்கி குறுகிய காலத்திலேயே அதை எடுத்து முடித்து ஓடிடியில் வெளியிட்டு முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்திலும் வெற்றி கண்டனர். பாதியில் நிறுத்தப்பட்ட ராம் படத்தை மீண்டும் தொடர்வதற்கான சூழ்நிலைகள் இல்லாததால் இன்னொரு குறுகிய கால தயாரிப்பாக டுவல்த் மேன் என்ற படத்திற்காக ஜீத்து ஜோசப்பும் மோகன்லாலும் இணைந்தனர்.
கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நாற்பத்தி எட்டு நாட்கள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளது. செப்டம்பர் 15 முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் மோகன்லால் கலந்துகொண்டு நடித்துள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தனது சோசியல் மீடியா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப். இந்த படம் ஆறு ஆண் கதாபாத்திரங்கள் 6 பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி ஒரே நாளில் நடைபெறும் கதையாக த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.
இதனிடையே இந்த படமும் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போதே பிரபல நிறுவனம் ஒன்றும் அதற்கான பேச்சுவார்த்தையை துவங்கிவிட்டதாம்.