'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் மலையாளத்தில் 10 படங்களை கொண்ட ஆந்தாலாஜி படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறது. இவை அனைத்தும் பிரபல மலையாள கதாசிரியர் எம்டி வாசுதேவன் நாயர் எழுதிய கதைகளை மையமாக வைத்து உருவாக இருக்கின்றன. இதில் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிஜூமேனன் நடிக்கும் படமும் ஒன்று. மோகன்லால் நடிப்பில் மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்கிற வரலாற்று படத்தை முடித்துவிட்டு ரிலீசுக்கு தயாராக வைத்திருக்கும் இயக்குனர் பிரியதர்ஷன், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கி நடத்தி வருகிறார்.
பிரியதர்ஷன் இயக்கும் முதல் ஆந்தாலஜி படம் இதுதான்.. அதேசமயம் இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், இத்தனை வருடங்கள் மலையாள சினிமாவில் ஒன்றாக பயணிக்கும் பிரியதர்ஷனும் பிஜூமேனனும் முதன் முறையாக கூட்டணி சேரும் படமும் இதுதான். இந்த ஆந்தாலாஜி தொடரில் சந்தோஷ்சிவன், ஷ்யாம் பிரசாத், ஜெயராஜ் உள்ளிட்ட இயக்குனர்களும் படம் இயக்க உள்ளார்கள்.




