ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
மலையாள திரையுலகில் இயக்குனர், நடிகர், பாடகர் என பன்முகம் கொண்டவர் வினீத் சீனிவாசன். சமீபத்தில் அடிபொலி என்கிற ஆல்பம் மூலம் மானே ஓ மானே பாடலை பாடி மீண்டும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள வினீத் சீனிவாசன், தற்போது மோகன்லாலின் மகன் பிரணவ் மற்றும் பிரியதர்ஷன் மகள் கல்யாணி இருவரையும் வைத்து 'ஹிருதயம் என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார்.
எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை, கேரளாவில் தியேட்டர்கள் திறந்ததும் தான் இந்தப்படத்தை வெளியிடுவது என்பதிலும் உறுதியாக இருக்கிறார் வினீத் சீனிவாசன். அதுமட்டுமல்ல, கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ஆடியோ கேசட் வடிவிலும் இந்தப்படத்தின் பாடல்களை பதிவேற்ற முடிவு செய்துள்ளார். இதற்காக திங்க் மியூசிக் நிறுவனம் மூலம் ஜப்பானில் உள்ள ஆடியோ கேசட்டுகள் தயாரிக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் செய்து விட்டாராம்.
ஆடியோ கேசட்டுகள் மட்டுமல்லாமல், அதற்கு முன்பு புழக்கத்தில் இருந்த இசைத்தகடு முறையிலும் பாடல்களை பதிவேற்றம் செய்ய இருக்கிறாராம் வினீத் சீனிவாசன். ஆனால் இவற்றை படம் வெளியான பின்பே வெளியிட இருக்கிறாராம்.