ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி |
கடந்த 2019ல் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகி இயக்கிய, லூசிபர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எம்புரான் என்கிற பெயரில் உருவாக்க போவதாக அறிவித்த பிரித்விராஜ், அந்த திட்டத்தை தள்ளிவைத்து, விட்டு அதற்கு முன்னால் மோகன்லாலை வைத்தே 'புரோ டாடி' என்கிற முழுநீள காமெடி படத்தை இயக்க ஆரம்பித்து விட்டார். மீனா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் துவங்கியுள்ளது. இதில் பிரித்விராஜ் பைக்கில் அமர்ந்திருக்க அவரது தோளில் கைபோட்டபடி கல்யாணி பிரியதர்ஷன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று நேற்று வெளியானது. ஏற்கனவே லூசிபர் படத்தை இயக்கியதோடு, அதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்திருந்தார் பிரித்விராஜ். அதேபோல 'புரோ டாடி படத்திலும் தனக்கென ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி விட்டார் என்றே தெரிகிறது.