பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் | விவாகரத்து ஆனவர்களுடன் கனிவோடு இருங்கள் : மீரா வாசுதேவன் | தாடி பாலாஜிக்கு 1 லட்சம் மருத்துவ உதவி: தயாரிப்பாளர் வழங்கினார் | பிளாஷ்பேக்: 200 படங்களில் ஒரேஒரு படத்தில் மட்டும் ஹீரோயினாக நடித்தவர் | அரசன் படத்தில் சிம்பு ஜோடி யார் | வேல்ஸ் வசமான ஈவிபி : புதிய பிலிம் சிட்டியை திறந்து வைக்கும் நிர்மலா சீதாராமன் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த ராஜேஷ் | எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மூலம் இயக்குனர் ஆன ப்ராங்க் ஸ்டார் ராகுல் | ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு | கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு |

கடந்த 2019லேயே துவங்கப்பட்ட படம் தான் மலையாளத்தில் ஃபஹத் பாசில் நடிப்பில் தயாராகியுள்ள 'மாலிக்'. விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய பிரபல படத்தொகுப்பாளரும் பஹத் பாசில் நடிப்பில் டேக் ஆப் மற்றும் சி யூ சூன் ஆகிய படங்களை இயக்கியவருமான மகேஷ் நாராயண் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படம் வரும் ஜூலை-15ல் ஓடிடியில் ரிலீசாகிறது.
இந்தப்படத்திற்கு பின் பஹத் பாசில் நடிப்பில் உருவான இரண்டு படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில், இந்தப்படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என உறுதியாக இருந்தார்கள். ஆனால் இப்போதைக்கு அது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு இறங்கி வந்துள்ளார்கள்.
இந்தப்படம் பல வருடங்களுக்கு முன்பு கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படத்தில் பஹத் பாசில் 20 வயது முதல் 64 வயது வரையிலான விதவிதமான காலகட்டத்தை பிரதிபலிக்கும் தோற்றங்களில் நடித்துள்ளார். அதேபோல படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்துள்ள இளம் நடிகையான நிமிஷா சஜயனும் இதேபோன்ற வயதான கெட்டப்பில் நடித்துள்ளார்.