ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் |

விஷ்ணு சசிசங்கர் இயக்கத்தில், உன்னி முகுந்தன், பேபி தேவநந்தா மற்றும் பலர் நடித்து டிசம்பர் 30ம் தேதி வெளிவந்த மலையாளப் படம் 'மாளிகப்புரம்'. சபரிமலைக்குச் செல்ல ஆசைப்படும் ஒரு சிறுமி, தனது தோழன் ஒருவனுடன் சபரிமலை செல்வதுதான் இப்படத்தின் கதை.
கேரளாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் தற்போது 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. மலையாளத்தில் 100 கோடி வசூலைக் கடக்கும் மூன்றாவது படம் இது. இதற்கு முன்பு மோகன்லால் நடித்த 'புலிமுருகன், லூசிபர்' ஆகிய படங்கள்தான் 100 கோடி வசூலைக் கடந்திருந்தது.
'மாளிகப்புரம்' 100 கோடி வசூலைக் கடந்தது குறித்து அப்படத்தின் கதாநாயகன் உன்னி முகுந்தன், “அனைவருக்கும் நன்றி, மகிழ்ச்சி, பெருமை…எங்களது படத்திற்கு ஆதரவும் அன்பும் தந்த அனைத்து குடும்ப ரசிகர்கள், குழந்தைகள் அனைவருக்கும் மிக்க நன்றி. 'மாளிகப்புரம்' குழுவிற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்தகள்,” எனத் தெரிவித்துள்ளார்.




