நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இன்றைய இளைஞர்கள் பலர் சினிமா மோகத்தில் அதிகமாக வீழ்ந்து கிடப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிகாலை காட்சிகள் நடத்தி அதற்கு இளைஞர்களை வரவழைப்பதை சில சினிமா ஹீரோக்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இந்த பொங்கலுக்கு வெளிவந்த 'துணிவு' படத்தின் அதிகாலை காட்சியின் போது ஒரு இளைஞர் லாரி மீதிருந்து கீழே விழுந்து உயிரைவிட்டது வரை நடந்துள்ளது.
பல கல்லூரி, பள்ளிகளில் சினிமா விழாக்கள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் 'மைக்கேல்' என்ற படத்தின் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றது. அங்கு முத்தக்காட்சி ஒன்றை பேனராக வைத்திருக்கிறார்கள்.
பிப்ரவரி 4ம் தேதி தனுஷ் நடித்துள்ள 'வாத்தி' படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில்தான் நடைபெற உள்ளது. சினிமா விழாக்களுக்கு அந்தக் கல்லூரியில் உள்ளவர்கள் எப்படியும் கலந்து கொள்வார்கள். அனைவரும் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்வார்கள். அதனால் இலவச விளம்பரம் கிடைக்கும் என்ற ரீதியில்தான் பலரும் இப்படி செய்து வருகிறார்கள்.
ஏற்கெனவே, சமூக வலைத்தளங்களில் நடக்கும் ரசிகர்கள் சண்டையால் இன்றைய இளைய சமூகம் தவறான பாதையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கல்வி நிலையங்களில் நடக்கும் சினிமா விழாக்களை தடை செய்ய வேண்டும் என பலரும் குரல் கொடுக்கிறார்கள்.