'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த பிங்க் ஹிந்தி படத்தின் ரீமேக்கான வக்கீல்சாப் கொரோனா இரண்டாவது அலைக்கு முன்பே தியேட்டர்களில் வெளியாகி வெற்றி பெற்றது. அதையடுத்து மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கில் ரீமேக்கில் ராணாவுடன் இணைந்து நடித்து வந்தார்.
இந்நிலையில கடந்த ஏப்ரல் மாதம் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வந்தார். அதையடுத்து கடந்த 2 மாதங்களாக ஓய்வில் இருந்து வந்த பவன்கல்யாண், தற்போது ஆந்திராவில் படப்பிடிப்புகள் நடத்த தளர்வுகள் கொடுக்கப்பட்டிருப்பதால் ஜூலை இண்டாவது வாரத்தில் இருந்து அய்யப்பனும் கோஷியும் ரீமேக் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே ஹரி ஹர வீரமல்லு படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள திட்டமிட்டிருக்கிறாராம்.