கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரும் குஷி ரவி | ஹீரோவான ‛பிக் பாஸ்' விக்ரமன் | ‛பறந்து போ' கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் : 9 வருட காதலரை மணந்தார் | பிளாஷ்பேக் : 33 முறை மோதிய விஜயகாந்த், பிரபு படங்கள் | பிளாஷ்பேக்: முத்துராமலிங்கத் தேவர் பார்த்த ஒரே படம் | இன்று ரவிமோகன் பிறந்த நாள்: சிறப்பு போஸ்டர்கள் வெளியிட்டு வாழ்த்து | மடோனா, இவ்வளவு அழகாகப் பாடுவாரா ? | திருமணம் எப்போது? அதர்வா நச் பதில் | அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் : பிஸியாகும் நேரு ஸ்டேடியம் | கதை தயாராகாமல் அறிவிக்கப்பட்டதா விக்ரம் 64 ? |
மலையாளத்தில் கிட்டத்தட்ட 100 படங்கள் நடித்துவிட்ட நடிகர் பிரித்விராஜ், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். மோகன்லாலை ஹீரோவாக வைத்து அவர் இயக்கிய அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று முதன் முதலில் 200 கோடி வசூலை ஈட்டிய மலையாள படம் என்கிற பெயரையும் பெற்றது. தற்போது அந்த படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்னொரு பக்கம் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கப்போவதாக கடந்த வருடம் அறிவித்திருந்தார் பிரித்விராஜ்.
இந்த நிலையில் தற்போது எம்பிரான் படத்திற்கு முன்னதாக மீண்டும் மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் உடன் அறிவித்துள்ளார் பிரித்விராஜ். லூசிபர் படத்தை தயாரித்த மோகன்லாலின் நண்பரான ஆண்டனி பெரும்பாவூரின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது