தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! | பிள்ளையார்சுழி போட்ட பிரேமி: மனம் திறந்த பிரியதர்ஷினி | நயன்தாராவிற்கு ஆதரவு அளித்தது ஏன்? - நடிகை பார்வதி விளக்கம்! | பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி |
கொரோனா இரண்டாவது அலை நாடெங்கிலும் வேகமாக பரவி வருகிறது பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்க வழிகாட்டுதலின்படி தடுப்பூசி மருந்தை, இரண்டு கட்டங்களாக போட்டுக்கொண்டு வருகின்றனர் ஆனாலும் பல இடங்களில் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில் நடிகர் மகேஷ்பாபு, அரசு அதிகாரிகளுடன் பேசி, தனது சொந்த முயற்சியின் பேரில், ஆந்திராவை சேர்ந்த புர்ரிபலேம் மற்றும் சித்தாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி மருந்து தடையின்றி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்
இந்த இரண்டு கிராமங்களுக்கு மட்டும் தடுப்பூசி கிடைப்பதற்கு, மகேஷ்பாபு இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்கு, காரணம் இருக்கிறது. மகேஷ்பாபு நடிப்பில் சில வருடங்களுக்கு முன் ஸ்ரீமந்துடு என்கிற படம் வெளியானபோது, அந்த சமயத்தில் மகேஷ்பாபு இந்த இரண்டு கிராமங்களையும் தத்து எடுத்துக் கொண்டு, அவர்களுக்கான தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றி வந்தார். இந்த நிலையில்தான் அவர்களுக்கு தடுப்பூசி ஏற்பாடு செய்வதும் தனது கடமை என்பதை உணர்ந்து. இந்த பற்றாக்குறை சமயத்திலும். அந்த கிராம மக்களுக்கு அவை தடையில்லாமல் கிடைப்பதற்கு. ஏற்பாடு செய்துள்ளார் மகேஷ்பாபு. அவரது இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.