புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தெலுங்கு சினிமாவை பொருத்தவரை, நடிகர் வெங்கடேஷ் மற்ற மொழிகளில் ஹிட் ஆகும் படங்களை தேடிப்பிடித்து, தெலுங்கில் ரீமேக் செய்து தனது வெற்றியை எப்போதும் உறுதி செய்து கொள்வார். அதேசமயம் பாலகிருஷ்ணாவோ நேரடி தெலுங்கு படங்களில் நடிப்பதையே விரும்புகிறார். அதனால் ரீமேக் பக்கம் அவர் கவனம் திரும்புவதே இல்லை.
இந்தி பிங்க் படத்தின் தெலுங்கில் ரீமேக்காக உருவாகி, சமீபத்தில் பவன் கல்யாண் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற வக்கீல் சாப் பட வாய்ப்பு முதன் முதலில் பாலகிருஷ்ணாவை தான் தேடி சென்றது. ஆனால் ரீமேக்கில் நடிக்க விரும்பாத பாலகிருஷ்ணா அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார். ஆனால் அந்தப்படம் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து, ரீ என்ட்ரி கொடுத்த பவன் கல்யாணுக்கு, மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துவிட்டது.
அதேபோல மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் பட தெலுங்கு ரீமேக்கில் பிஜுமேனன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதன்முதலில் பாலகிருஷ்ணாவைத்தான் அணுகினார்களாம் . ஆனாலும் வழக்கம்போல அவர் மறுத்துவிட, அதன் பிறகு அந்த கதாபாத்திரம் மீண்டும் எதிர்பாராதவிதமாக பவன் கல்யாணுக்கு சென்றுள்ளது. ஏற்கனவே மலையாளத்தில் வெற்றியை உறுதி செய்த அந்த படம், தெலுங்கிலும் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பதில் சந்தேகமில்லை.