2025 வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? |

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகராக வலம் வரும், பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் நடிக்கும் படங்களில் எல்லாம் கவனித்துப் பார்த்தால், அவருடன் இணைந்து நடிக்கும் கதாநாயகிகள் அனைவரும் முன்னணி நடிகைகளாக தான் இருப்பார்கள். அவரது ஆரம்ப படத்தில் இருந்து இது தொடர்கிறது. காரணம் அவரது தந்தை பெல்லம்கொண்டா சுரேஷ். மிகப்பெரிய தயாரிப்பாளர். அப்படிப்பட்ட பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ், தற்போது கதாநாயகி கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா.?
ஆம்.. இவர் இந்தியில் முதன்முதலாக அடியெடுத்து வைக்க இருக்கிறார். இந்த படம், பிரபாஸ் நடித்து ஹிட்டான சத்ரபதி படத்தின் ரீமேக்காக உருவாக இருக்கிறது. ஹிந்தியில் தான் அறிமுகமாகும் படத்தில் மிகப்பெரிய கதாநாயகியுடன் நடிக்க வேண்டுமென முயற்சித்து பார்த்ததில், பாலிவுட் கதாநாயகிகள் பலரும் நோ சொல்லி விட்டார்களாம் அதனால் கிட்டத்தட்ட அங்குள்ள இரண்டாம் நிலை கதாநாயகி ஒருவருடன் தான், பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் நடிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.