என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
இந்தி, தமிழை தொடர்ந்து மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த பிப்-14ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீசனையும் மோகன்லாலே தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி சென்னையில் தான் நடைபெற்று வருகிறது என்பது ரசிகர்கள் பலர் அறிந்திராத செய்தி.. தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி உள்ளதால், வழக்கம்போல ஊரடங்கு கட்டுப்பாட்டுகள் வரும் மே மாதத்தில் அமலுக்கு வரும் என சொல்லப்பட்டு வருகிறது.
கடந்த வருடமும் இதேபோன்ற ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால், கடந்த மார்ச் 20ஆம் தேதி 76வது எபிசோட் வரை ஒளிபரப்பான நிலையில், இந்த நிகழ்ச்சி 76 நாட்களுடன் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த மூன்றாவது சீசனும் 70 நாட்களை கடந்துவிட்ட நிலையில், அதேபோன்ற சங்கடத்தை இந்தமுறையும் சந்திக்க நேரிடலாம் என்றே தெரிகிறது.
குறிப்பாக மே முதல் வாரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், ஆச்சர்யமாக கடந்த முறை போல இந்தமுறையும் அதே 76 நாட்களுடன் இந்த நிகழ்ச்சி இடையில் நிறுத்தப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு கொரோனாவால் பெரிய பாதிப்பு இருக்காது என்பது உண்மை தான்... ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக வெளியிலிருந்து வந்து செல்லும் பணியாளர்கள், ஊரடங்கு சமயத்தில், பிக்பாஸ் பணிகளுக்காக ஸ்டுடியோ வந்து செல்ல முடியாது என்பதால் தான், கடந்தமுறை பாதியிலேயே நிறுத்தப்பட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறையும் அதே சோகம் தொடருமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி..