சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

மலையாள சினிமாவை பொருத்தவரை நடிகர் திலீப் மட்டும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் விதவிதமான கெட்டப்புகளையும் விரும்பி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஏற்கனவே சாந்துப்பொட்டு, குஞ்சுக்கூனன், மாயமோகினி, கம்மர சம்பவம் என பலமுறை இப்படி பரிசோதனை முயற்சியில் இறங்கி வெற்றியும் பெற்றுள்ளார். தற்போது தனது நண்பர் நாதிர்ஷா டைரக்ஷனில் நடித்து வரும் கேசு இ வீட்டின் டே நாதன் என்கிற படத்தில், அரசு வேலையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தைச் சேர்ந்த 70 வயதான கிழவராக நடிக்கிறார் திலீப்.
ஏற்கனவே அந்த கதாபாத்திர கெட்டப்புகள் வெளியான நிலையில், தற்போது இந்தப்படத்தில் அவரது தோற்றம் குறித்து இன்னொரு போஸ்டர் வெளியாகியுள்ளது. தலையில் பாதிக்கு மேல் முடி இல்லாமல், துண்டு மட்டுமே கட்டிக்கொண்டு தொப்பை வயிற்றுடன், சோப்பு போட்டு குளிப்பது போன்று திலீப் காட்சி அளிப்பது ரசிகர்களை மிரள வைத்திருக்கிறது. வழக்கமான ஒரு கமர்ஷியல் ஹீரோவாக நடித்துவிட்டு போகாமல், நடிப்பின் மீது கொண்ட தணியாத தாகம் காரணமாகவே, இப்படி வித்தியாசமான முயற்சியில் அவர் இறங்கியுள்ளார் என ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.




