மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

கொரோனா பரவலின் அடுத்த அலை முன்பைக் காட்டிலும் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஒரு சில மாநிலங்களில் குறிப்பிட்ட லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் நடமாட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. தியேட்டர்களில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் மக்களின் வருகை குறிப்பிட்ட அளவில் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தில் சில பிரபலங்கள் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்கள். அதன் காரணமாக சில சினிமா படங்களின் படப்பிடிப்புக்களை அக்குழுவினர் ரத்து செய்துள்ளார்கள்.
சில பெரிய படங்களின் படப்பிடிப்பு மட்டும் தற்போது நடந்து வருகிறதாம். அவையும் அடுத்த சில நாட்களில் நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது. சினிமா படப்பிடிப்பு நிறுத்தப்பட்டால் சின்னத் திரைத் தொடர்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்படலாம் என்கிறார்கள். அதன் காரணமாக டிவிக்களில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர்களுக்கும் பாதிப்பு வர வாய்ப்புள்ளது.
கடந்த வருடம் கொரோனா தாக்கிய போதே எழுந்து கொள்ள முடியாத திரையுலகம் இந்த வருடத்தில் கொஞ்சம் மீள ஆரம்பித்தது. இப்போது மீண்டும் தாக்கம் என்பதால் அடுத்த மீள்வுக்கு இன்னும் பல மாத காலம் ஆகலாம் என வருத்தத்துடன் சொல்கிறார்கள்.