‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமா ரசிகர்கள் உணர்ச்சிகரமானவர்கள். தங்கள் அபிமான ஹீரோக்களின் படங்கள் வெளிவரும் போது அவர்கள் கொண்டாடுவதைப் போல வேறு எந்த சினிமா ரசிகர்களும் கொண்டாட மாட்டார்கள். இங்கு கடந்த சில வருடங்களாகத்தான் இந்த அதிகாலைக் காட்சிகள் பிரபலம். ஆனால், தெலுங்குத் திரையுலகத்தில் 30 வருடங்களுக்கு முன்பே அதிகாலைக் காட்சிகள் நடந்தது இங்குள்ள பலருக்குத் தெரியாது.
இன்றைய தெலுங்குத் தயாரிப்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் தில் ராஜு. தன்னை பவன் கல்யாணின் தீவிர ரசிகர் என வெளிப்படையாகச் சொன்னவர். பல முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களைத் தயாரித்த தில் ராஜுவுக்கு இப்போதுதான் பவன் கல்யாணை வைத்து படம் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
'வக்கீல் சாப்' படத்தை போனிகபூருடன் இணைந்து தயாரித்துள்ளார். இன்று அந்தப் படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சியில் மற்ற பவன் கல்யாணின் ரசிகர்களைப் போலவே தியேட்டரில் பேப்பர்களைத் தூவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ காட்சிதான் இன்று தெலுங்குத் திரையுலகத்திலும் ரசிகர்களிடத்திலும் ஹாட் டாபிக்.
தில் ராஜுக்கு மீண்டும் ஒரு பவன் கல்யாண் படம் பார்சேல்ல்ல்.....