‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
முன்னணி தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில். இளம் சாக்லெட் ஹீரோவாக நடித்து வந்த அகில் தற்போது நடித்து வரும் ஏஜெண்ட் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்து ஆளே மாறி இருக்கிறார். படத்தின் பர்ஸ்ட்லுக்கை பார்த்து தெலுங்கு ரசிகர்கள் வாயடைத்து போய் நிற்கிறார்கள்.
சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டி இந்த படத்தை இயக்குகிறார். இவர் கிக், ரேஸ் குர்ரம், கிக் 2, துருவா படங்களை இயக்கியவர். இந்த படத்தின் மூலம் அகிலை வேற லெவலுக்கு கொண்டு வந்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் நேற்று தொடங்கியது. டிசம்பர் 24ந் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் சுரேந்தர் ரெட்டி கூறியிருப்பதாவது: அகிலின் இந்த அசாத்தியமான உடல் எடை மாற்றம் 7 மாதங்களுக்கு முன் தொடங்கியது. அவர் நினைத்தபடி உடலைக் கொண்டு வர அவர் ஒவ்வொரு நாளும் காட்டிய அர்ப்பணிப்பையும், ஆர்வத்தையும் பார்த்து நான் வாயடைத்துப் போனேன். ஏஜெண்ட் திரைப்படத்தின் மூலம் நீங்கள் இதுவரை பார்த்திராத ஒரு அகிலை நான் காட்டுவேன் என்று உறுதியாகக் கூறுகிறேன். இவ்வாறு சுரேந்தர் ரெட்டி கூறியுள்ளார்.