பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
கடந்த ஒரு வருடமாக லாக்டவுன் காரணமாக வெளியாகாமல் முடங்கி இருந்த மலையாள படங்கள் தற்போது அடுத்தடுத்து ரிலீசாகி வருகின்றன. அதில் குஞ்சாக்கோவின் படங்கள் தான் அதிகம் ரிலீசாகின்றன என்பது ஆச்சர்யம். கடந்த 20 நாட்களுக்கு முன் இவர் நடித்த மோகன்குமார் பென்ஸ் என்கிற படம் வெளியானது.
அந்தப்படமே இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது இன்று குஞ்சாக்கோ நடித்துள்ள 'நாயாட்டு' என்கிற படம் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் சராசரி போலீஸ்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஞ்சாக்கோ. துல்கர் சல்மான் நடித்த சார்லி, ஏபிசிடி ஆகிய படங்களை இயக்கிய மார்ட்டின் பரக்கத் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
அதேசமயம் நாளை குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள நிழல் என்கிற படமும் வெளியாகிறது. இந்தப்படத்தில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஜான் பேபியாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். ஆனால் மாஸ்க் அணிந்த ஒரு ராபின் ஹூட் கதாபாத்திரத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பது போல போஸ்டர்களை வெளியிட்டு படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். தவிர இந்தப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.