''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ஆந்திர அரசியலில் நடிகர் பவன் கல்யாண் நுழைந்த பிறகு அங்கு ஒரு பரபரப்பு ஏற்பட்டது உண்மை. கடந்த சட்டசபைத் தேர்தலில் பவன் கல்யாண் கட்சியான ஜன சேனா போட்டியிட்டாலும் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கூட பெற முடியவில்லை என்பதும் உண்மை. அவரது கட்சி சார்பில் ஒரே ஒரு எம்எல்ஏ மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பவன் கல்யாண் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினார். இருப்பினும் கடந்த இரண்டு வருடங்களாக தீவிர அரசியலில்தான் இருக்கிறார். ஆளும் அரசான ஜெகன்மோகன் ரெட்டி அரசை எதிர்த்து அடிக்கடி குரல் எழுப்பி வருகிறார்.
இந்நிலையில் பவன் கல்யாண் நடித்த 'வக்கீல் சாப்' படம் நேற்று ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் அதிக அளவிலான தியேட்டர்களில் வெளியானது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு சார்பில் நேற்று முன்தினம் இரவு இப்படத்திற்காக கூடுதல் டிக்கெட் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டது. அதன்பின் நீதி மன்றத்தை அணுகி அதற்கு தடை உத்தரவு வாங்கினர். மூன்று நாட்களுக்கு டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அனுமதி கிடைத்தது.
ஆந்திர அரசின் உத்தரவு பவன் கல்யாணைப் பழி வாங்க எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என ஆந்திர அரசியலிலும், திரையுலகிலும் கருதுகின்றனர். மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு பவன் கல்யாண் நடித்துள்ள படம் வெளிவந்துள்ளதால் அவரது ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி படையெடுக்கின்றனர். சில பல நெகட்டிவ் விமர்சனங்களை மீறி படம் நன்றாகவே வசூலிக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.